India
நாட்டில் 50,000-ஐ கடந்தது கொரோனா பலிகள்.. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிசையில் தொடரும் மோடி அரசின் சாதனைகள்!
நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரையில் 26 லட்சத்து 47 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரையில் 19 லட்சத்து 19 ஆயிரத்து 842 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 57 ஆயிரத்து 584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் இந்தியாவில் 1.92 சதவிகிதம் பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் எண்ணிக்கை அளவில் நாட்டில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பலி. அதன்படி நேற்று ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தற்போது 6 லட்சத்து 76 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் 3 கோடியே 41 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் நேற்று ஒரு நாளில் 7.31 லட்சத்து 697 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!