India
விளை நிலங்களை அழித்து புதிதாக 23 தேசிய நெடுஞ்சாலைகள் கொண்டு வரும் மோடி அரசு: சுங்க கட்டணம் உயர வாய்ப்பு?
தமிழகத்தில் விளைநிலங்களை அழித்து கொண்டுவரப்படும் சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், புதிதாக 23 தேசிய நெடுஞ்சாலைகளை இந்தியா முழுவதும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 23 புதிய தேசிய நெடுஞ்சாலை பணிகளை முடிக்க முடிவு செய்துள்ளது. நான்கு எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலைகள், டெல்லி – மும்பை, அகமதாபாத் – தோலெரா மற்றும் அம்ரிஸ்டர் – ஜாம்நகர் உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் மார்ச் 2023-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதம் உள்ள 9 நெடுஞ்சாலையின் பணிகள் மார்ச் 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலைகளின் ஒட்டுமொத்த நீளம் 7,800 கிமீ. இதற்கு கிட்டத்தட்ட 3.3 லட்சம் கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளில் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தேசம் முழுக்க விரியும் இந்த நெடுஞ்சாலைகள் சூரத், சோலாப்பூர், லக்னோ, விசாகப்பட்டினம், சென்னை, பெங்களூர், விஜயவாடா, ராய்பூர், கோட்டா, கோரக்பூர் மற்றும் சில்லிகுரி உள்ளிட்ட இடங்களை இணைப்பதாக உள்ளன.
இந்த நெடுஞ்சாலை பணிகளுக்கான நிதியைச் சுங்கச் சாவடிகளில் வசூலாகும் பணத்திலிருந்து ஈடுகட்டத் தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது. அதாவது 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஒரு சுங்கச் சாவடியை ஏலத்துக்கு விடப்பட்டு அதிலிருந்து வரும் பணத்தை நெடுஞ்சாலை அமைக்கச் செலவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே சுங்கச் சாவடிகளில் மத்திய அரசு கொள்ளை அடிக்கிறது என்று மக்கள் கவலையில் இருக்கும் நிலையில், இது போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளதால் சுங்க வரி மேலும் அதிகரிக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோடிக் கணக்கான மக்களுக்கு இது மேலும் மிகப் பெரிய சுமையாக மாறும் என்று ஐயம் எழுகிறது.
அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் அமைக்கப்படும் 8 வழிச்சாலையால் பல விவசாயிகளின் விளை நிலங்கள் தார் சாலைகளாக மாறும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேப்போல் நாடு முழுவதும் 23 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டால் பல விவசாய நிலங்கள், வன பகுதிகள் என அழிக்கப்படும். இதனால் விவசாயமும் இயற்கையும் அழிந்து போகும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!