India
குற்றவாளிகளைத் தேடி தேடி கட்சியில் இணைக்கும் பா.ஜ.க: புதிதாக இணைந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன்!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, தங்கள் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை விலைக்கு வாங்கி மோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது.
மேலும் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில், சினிமா பிரபலங்கள் பா.ஜ.க-வில் இணைந்தது போய் தற்போது கட்சியில் பிரபல ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் என யாராக இருந்தாலும் பரவாயில்லை என கட்சிப் பக்கம் இழுத்து எப்படியாவது உறுப்பினர்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில், பா.ஜ.க சினிமா பிரபலங்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து கோவாவிலும் போதைப் பொருள் கடத்தல் தலைவன் என்று கூறப்படும் ராய் நாயக்கை கட்சியில் இணைத்துள்ளது பா.ஜ.க.
முன்னாள் உள்துறை அமைச்சர் ரவி நாயக்கின் இளைய மகன் ராய் நாயக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ராய் நாயக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது குறித்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டுவந்தார். மேலும், ராய் நாயக் மீது சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தார்.
மனோகர் பாரிக்கர் உயிரிழந்த நிலையில் அதிகாரத்திற்கு வந்த பா.ஜ.க தலைவர்கள் ராய் நாயக்கை பா.ஜ.க பக்கம் இழுக்கத் தொடங்கினர். மேலும் ராய் நாயக்கிற்கு எதிராக சி.பி.ஐ விசாரணை கோரவில்லை என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.
ராய் நாயக்கை கட்சியில் இணைத்தது பல ஆண்டுகளாக இருந்து பணியாற்றி வந்தவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகள், மோசடி பேர்வழிகளை கட்சியில் இணைத்து மக்களிடையே தன் செல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறான செயல்களால் தன் கட்சி உறுப்பினர்கள் மத்திய பா.ஜ.க கெட்ட பெயரை ஈட்டி வருகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?