India
கொரோனா தடுப்பூசியை நேரடியாக மாநில அரசுகள் வாங்க தடை விதிக்க வேண்டும் - தடுப்பூசி நிபுணர்குழு முடிவு!
இந்தியாவில் ஆய்வு செய்யப்பட்டு வரும் தடுப்பூசி தவிர வெளிநாடுகளில் இருந்தும் தேவைக்கு ஏற்ப வாங்கலாம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான தடுப்பூசி நிபுணர்குழு முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில் தற்போது இந்தியாவில் ஆய்வு செய்யப்பட்டு வரும் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் ஆய்வு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. எப்போது ஆய்வுகள் முடியும், தயாரிப்பு எப்போது தொடங்க வாய்புள்ளது ஆகிய விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், நாடுமுழுவதும் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில் எந்தெந்த நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்குவது, மாநிலங்களுக்கு விநியோகிப்பது உள்ளிட்ட அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
தடுப்பூசி கொள்முதலை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசியை வாங்குவது பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு தடை விதிக்க வெண்டும் என்று நிபுணர்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்க இன்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கும்போது, இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற நடப்பு விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!