India
கேரளாவை புரட்டிப் போடும் கனமழை : இடுக்கியில் நிலச்சரிவில் 5 பேர் பலி - 80 பேர் மண்ணில் புதைந்ததாக தகவல்!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் நாடுமுழுவதும் பருமழைக் காரணமான நாட்டில் பல மாநிலங்கள் கடுமையான இன்னல்களை சந்தித்துவருகின்றனர்.
அந்தவகையில், கடுமையான இயற்கை மற்றும் கொரோனா பேரிடரால் பெரும் சாவல்களை சந்தித்துவந்த கேரளா தற்போது மீண்டும் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் முதல் முதலில் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளாதான்.
கடுமையான தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 3 தினங்களாகவே வயநாடு, இடுக்கி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நீர் சூழ்ந்து குடியிருப்பு பகுதிகள், ஆறுகள் உள்ளிட்டவைகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் பல்வேறு பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், மூணாறு மாவட்டத்தில் பணியாற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகத்தால் கட்டுக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகள் ராஜமலை பகுதியில் உள்ளது. 3 தினங்களாகவே மழை பெய்துவருவதால் மின்சாரம், சாலை என அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நேற்று பெய்த கனமழையால், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 4 பெரிய குடியிருப்பு கடுமையான நிலச்சரிவில் சிக்கியது. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததால் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி 80 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ராஜமலை பகுதியில் மீட்பு படையினர் விரைந்து சென்றும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதிக்கு உள்ள பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதால் மீட்புப்பணியினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இடுக்கி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சேற்றில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகளும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !