India

“ஓராண்டு பணியாற்றினாலும் பணிக்கொடை வழங்க வேண்டும்” : மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழுப் பரிந்துரை!

தொடர்ந்து பல ஆண்டுகள் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளருக்கு வழங்கப்படும் பணி ஓய்வுத்தொகையே கிராஜுட்டி எனப்படும் பணிக்கொடை.

தொழிலாளர்களின் பணிக்கொடை பலனைப் பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நடை முறை தற்போது உள்ளது.

இதனை மாற்றி ஒராண்டு பணியாற்றினாலும் பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என்று தொழில் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது. அதற்கான அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தனியார் துறைகளில் தற்போது இரண்டு, ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் மட்டும் பணியாற்றிய பிறகு பல்வேறு காரணங்களால் வேறு நிறுவனங்களில் சேரும் போக்கு அதிகரித்துள்ளது.

எனவே, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் ஓராண்டு பனியாற்றினாலும் பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். அதற்கு தேவையான சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

Also Read: தலித் துறவிகள், தலைவர்களைப் புறக்கணித்து ராமர் கோவில் பூஜை நடத்தும் யோகி அரசு? இதிலும் கூட பாரபட்சமா ?