India
“பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது; பலி 38,135ஆக அதிகரிப்பு” : தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 18,020,684 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 688,913 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 52972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 771 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,03,659 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38,135 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டில் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா சோதனை இரண்டு கோடியைத் தாண்டியது. ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி ஐந்து லட்சம் பேருக்கு (1,05,32,074) சோதனகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 2,02,02,858 பேரிடம் பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், முதல்வர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதால மத்திய அரசு தொற்றின் தீவிரத்தன்மை அறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!