India

இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டரை நடத்தியே தீருவேன் என UGC பிடிவாதமாக இருப்பது ஏன்? - மாணவர்கள் கேள்வி!

கல்லூரி, பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல்.

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று பல்கலைக்கழக மாணியக் குழு நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்து மூலம் பதிலளித்திருந்தது. அதற்கு மாணவர்கள் தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, பல மாநிலங்களில் மழை பாதிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல் செப்டம்பர் மாதம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று யு.ஜி.சி தொடர்ந்து பிடிவாதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்” - உச்சநீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்!

ஜூலை 31 வரை நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினால் விரைவாக ஒரு வேலை தேட வாய்ப்பாக அமையும். வேலை இழந்து நிற்கும் பல குடும்பங்களின் நிலமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை தாமதமின்றி வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: “இதுதான் நீங்கள் சொல்லும் சரியான முடிவா?” - மோடி அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!