India
“அனைத்து உயர்கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு” - கேபினட் ஒப்புதல் பெற்ற புதிய கல்விக் கொள்கை!
மத்திய அரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் 2019ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர்.
புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்ற மும்மொழிக் கல்வி, குருகுல கல்வி முறை, NTA எனப்படும் நுழைத்தேர்விற்கான அமைப்பு, 3 வயது முதலே கல்வியை தொடங்குதல், சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், கல்வியாளர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வியாளர்கள் வைத்த சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது. இருப்பினும் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அனைத்து உயர்கல்விக்கும் தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும். இதனை தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தலாம் எனவும் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 10+2 திட்டத்துக்குப் பதிலாக 5+3+3+4 பள்ளிக் கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் போக்ரியால், மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே பேசுகையில், “கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது உயர்கல்வி படிப்புகளில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
M.Phil படிப்புகள் நிறுத்தப்படுகின்றன. உயர்கல்வி படிப்புகளில் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்கலாம். அதாவது பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளில் ஓராண்டோ, ஈராண்டோ விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் படிப்பைத் தொடர அனுமதிக்கப்படும்.
UGC, AICTE, NCTE குழுக்களுக்கு பதில் உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ( சட்டம் மருத்துவம் தவிர) தனி கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!