India

20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன்: கார்ப்பரேட் முதலாளிகளுக்காக சிறு, குறு தொழில்கள் மீது பழிபோடும் ஆர்பிஐ!

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், கோடிக் கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தது.

அதில், நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களின் மோசடியால் வங்கிகளின் நிதிநிலை மிகவும் மோசமடைந்திருப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் நிதிநிலை தன்மை குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாராக்கடன் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

ஊரடங்கால் ஏராளமான தொழில்துறைகள் முடங்கி வேலை வாய்ப்பை இழந்ததால் வருவாய் குறைந்துவிட்டது. கடந்த ஏப்ரல் 30ம் தேதியின் படி 48.6 சதவிகித வாடிக்கையாளர்கள் கடன் தவணை சலுகை திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். 2021 மார்ச் இறுதியில் தவணை சலுகையை பயன்படுத்திய கடன்கள் 25-30 சதவிகிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வங்கிகளின் நிதிநிலை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே பெருமளவு கடனை பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: 1.47 லட்சம் கோடியை சுருட்டிய 2,426 நிறுவனங்கள்: வெளி நாட்டுக்கு தப்ப வைப்பதுதான் தண்டனையா? -ராகுல் ட்வீட்