India
“35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த என்கவுண்டர்; 11 போலிஸுக்கு ஆயுள் தண்டனை” : சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு!
ராஜஸ்தானில் 1985ம் ஆண்டு பிப்ரவரி 21 தேதி அன்றி பரத்பூரில் நடந்த போலீஸ் மோதலில் 64 வயதான பரத்பூர் ராஜா மான் சிங் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தேர்தலின் போது ஏற்பட்ட தேர்தல் தகராறில் தான சரணடைய காரில் வந்துள்ளார். அப்போது போலிஸார் அவரை சுற்றிவளைத்த சுட்டுக்கொன்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது நடந்த இந்த துப்பாக்கிச் சூடு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அவரது இறுதி சடங்கில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூட்டம் திரண்டது. இதுதொடராக வழக்குத் தொடரப்பட்டு, பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து 1985-ம் ஆண்டு ராஜஸ்தான் சுயேட்சை எம்.எல்.ஏவான ராஜா மான் சிங்கின் கொலை வழக்கில், துணை கண்காணிப்பாளர் உள்பட 18 போலிஸார் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
இதில் அனைவருமே தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர். 4 பேர் விசாரணை காலத்திலேயே மரணமடைந்துவிட்டனர். இந்த சூழ்நிலையில்தான் நேற்று மதுரா சி.பி.ஐ நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் டி.எஸ்.பி உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!