India
கொரோனா பெரும் துயரில் கன மழையால் மூழ்கிய அசாம் - வெள்ளப்பெருக்கு, மண் சரிவில் சிக்கி 105 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நாடுமுழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் மக்கள் பெரும் அவதிபட்டுப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் வட மாநிலங்களில் பெய்த கன மழையால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக, அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ தாண்டி நிலையில், தொற்ற சமாளிக்கவே அம்மாநில அரசு தினறி வருகின்றது.
இத்தகைய பாதிப்புக்கு மத்தியில் கனமழையால் அசாமின் பல பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 9 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உருவாகி பல கிராமங்களை நீரில் மூழ்கிப்போயிள்ளனர்.
அதுமட்டுமல்லது, மண் சரி, வெள்ளத்தில் சிக்கியோர் என தற்போது வரை 105 பேர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 2 ஆயிரத்து 678 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார்1 லட்சத்து 16 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலம் சேதமடைந்துள்ளது.
இதனால் 649 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 21 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 47,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பால முகாம்களில் மக்கள் அதிகமாக இருப்பதால் தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இதனிடையே, தலைநகர் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களாக பீகார், அரியானாவில் கனமழை பெய்து வருகிறது. இதனைபோல், இமாச்சலப் பிரதேசத்தில் இன்று மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!