India
“ஒரே நாளில் அதிக அளவாக 32,695 பேர் பாதிப்பு”: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வி காணும் மோடி அரசு...
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 13,694,593 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 586,845 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,616,747 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 140,140 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிக அளவாக 32,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 606 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,915 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் பேருக்கு சோதனை இலக்கு எட்டப்பட்டது. அதன்படி நேற்று மட்டும் 3,26,826 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1,27,39,490 பேருக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என ஐ.சி.எம்.ஆர் குறிப்பிட்டுள்ளது.
ஒரே நாளில் பாதிப்பு அதிகரிப்பதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியைக் கண்டுள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?