India

கொரோனா ஊரடங்கால் தலைவிரித்தாடும் வறுமை - 62% குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திய அவலம்!

கொரோனா தொற்றினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 62 சதவீத குழந்தைகள் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனை தொடர்பாக ‘சேவ் தி சில்ட்ரன்’என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வை நாடுமுழுவதும் உள்ள 7,235 குடும்பங்களில் அந்நிறுவனம் மேற்கொண்டது.

அதில், ஊரடங்கு காலத்தில் ஐந்தில் 2 பங்கு குடும்பத்தினரின் குழந்தைகள் பள்ளிகளில் மதிய உணவு பெறவில்லை என்ற தகவலை குறிப்பிட்டுள்ளது. அதேப்போல், 5-ல் 2 பங்கு குடும்பத்தினர், குழந்தைகளின் கல்விக்காக எந்தவிதமான கல்வி உதவியை கல்வி நிறுவங்களில் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது கிராமப்புறங்களில் 42 சதவீத குடும்பங்களிலும், நகர்ப்புறங்களில் 40 சதவீத குடும்பங்களிலும் எந்த கல்வி உதவியும் பெறவில்லை. அதனால் 62 சதவீத வீடுகளில் உள்ள குழந்தைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தற்போது வரை இந்த ஆய்வு முடிவுகள் குறித்த எந்த தகவலையும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சிறையில் போதிய சிகிச்சை இல்லை” : சமூக செயற்பாட்டாளர் வரவர ராவின் உடல்நிலை பாதிப்பு!