India
8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுண்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்!
உத்தர பிரதேசத்தில் 8 போலிசாரை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பலின் தலைவன் விகாஸ் துபே, என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த வெள்ளி அன்று பிக்ரூ என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த தூபேவை கைது செய்ய போலிஸ் படை சென்றது. துபேவின் விஸ்வாசியான காவல் ஆய்வாளர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்து எச்சரித்துள்ளார். கிராமத்துக்குள் போலிஸ் படை நுழைந்த போது எதிர்பாராத விதமாக ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 போலிஸார் பலியாகினர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய ரவுடி கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 2 போலிசார் கைது செய்யப்பட்டனர்.
துபே மட்டும் போலிஸ் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்து வந்தார். நேற்று மத்திய பிரதேச மாநில உஜ்ஜெய்ன் நகரில், பிரசித்தி பெற்ற மஹாகாலி கோயிலில் துபே இருப்பது தெரியவந்தது. துபேவை அடையாளம் கண்ட கோயில் பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆனால், துபே சரண்டையவே அங்கு சென்றதாக தகவல்கள் வந்தன. இதை உத்தரபிரதேச காவல் துறை மறுத்துள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து உத்திர பிரதேசம் நோக்கி, துபே கார் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று அதிகாலை 7 மணியளவில் துபே அழைத்துச் செல்லப்பட்ட கார், மழையால் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது போலிஸாரிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி, துபே தங்களை நோக்கி சுட்டதாகவும், தப்பிக்க விடாமல் தடுக்க அவர் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த விகாஸ் துபே இறந்ததாக மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது.
விகாஸ் துபே மட்டும் அல்ல அவரது 5 கூட்டளிகளும் கடந்த 6 நாட்களில் போலிஸால் என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!