India
ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட மறுப்பு: திட்டமிட்டு 9 முஸ்லிம்களை கொன்ற காவிகும்பல் -டெல்லி வன்முறையின் பின்னணி
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி போராட்டம் தொடங்கியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது, பிப்ரவரி 24ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது.
இந்த வன்முறை சுமார் 32 மணிநேரத்துக்கு நீடித்தது. இதனால் 53 பேர் பலியாகியும், நூற்றுக்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். மேலும், இந்துத்வ கும்பலால் வடகிழக்கு டெல்லியின் முக்கால்வாசி பகுதி சூறையாடப்பட்டது. அதேபோல, இஸ்லாமியர்களின் இருப்பிடம், மசூதிகள், தர்ஹாக்கள் உள்ளிட்டவை குறிவைத்து இந்துத்வ வெறியர்களால் சூறையாடப்பட்டது. இந்த தாக்குதல்கள் அனைத்தையும் பட்டப்பகலிலேயே அரங்கேற்றியுள்ளனர்.
‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டபடி, இஸ்லாமியர்களின் இருப்பிடங்களை தேடித்தேடி அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, வீடுகளில் உள்ள பொருட்களை சூறையாடியிருக்கின்றனர். அதில், வடகிழக்கு டெல்லியில் கோகுல்புரி, அசோக்நகர், சந்த்பாக், ஷிவ் விஹார், கரிமெண்டு, காம்ரி, பாகிரதி விஹார் முகுந்த் நகர், பிரிஜ்புரி ஆகிய பகுதிகளில் உள்ள 14க்கும் மேற்பட்ட மசூதிக்கள், தர்ஹாக்கள் ஒட்டுமொத்தமாக இந்துத்வ வெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது 9 இஸ்லாமியர்களை கொன்றதாக லோகேஷ் சோலங்கி (19), பங்கஜ் ஷர்மா (31), அங்கித் சவுத்ரி (23), பிரின்ஸ் (22), ஜதின் ஷர்மா (19), ஹிமன்ஷு தாகூர் (19), விவேக் பஞ்சல் (20), ரிஷப் சவுத்ரி (20), சமித் சவுத்ரி (23) கடந்த ஜூன் 29ம் தேதி டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை ஒன்றினை பெருநகர மாஜிஸ்திரேட் வினோத் குமார் கவுதம் முன்னிலையில் தாக்கல் செய்துள்ளது.
அதில், ‘கட்டார் இந்து ஏக்தா’ என்ற வாட்ஸ் அப் குழுவை பிப்ரவரி 25ம் தேதி மதியம் 12.49 மணியளவில் உருவாக்கி அதன் மூலம் இஸ்லாமியர்களை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு, ஒருங்கிணைந்து வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத வன்முறையை இந்து கும்பல் நிகழ்த்தியது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த கும்பல், கங்கா விஹார்-பாகீரதி விஹார் பகுதி வழியே வருவோரின் அடையாள அட்டைகளை காண்பிக்கச் சொல்லியும், அவர்களை ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லியும் கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் இஸ்லாமியர்களாக இருந்தால் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடாத இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கி கொலை செய்து கால்வாயிலும் வீசியுள்ளனர். அதன்படி, பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் பிரிஜ்புரி புலியாவிலிருந்து கால்நடையாக வந்த அமீன் என்பவர் பகிரதி விஹாரின் சி-பிளாக்கில் கொல்லப்பட்டு ஒரு வடிகால் வீசப்பட்டார். அதேபோல, பிப்.,26 அன்று காலை 10.30 மணிக்கு பூரே அலி என்பவர் அமீன் விசப்பட்ட கால்வாயிலேயே இந்து கும்பல் வீசி எறிந்துள்ளது. மேலும்ம் ஹம்ஸா என்பவர் அதே நாள் இரவு 9.15க்கு முஸ்தபாபாத்திலிருந்து வந்த போது ஈ-பிளாக்கில் மடக்கி கொன்று கால்வாயில் வீசியுள்ளார்.
இவ்வாறு, முர்சலின், ஆஸ் மொஹட், முஷாரஃப், அகில் அகமது, மற்றும் ஹாஷிம் அலி மற்றும் அவரது மூத்த சகோதரர் அமீர்கான் ஆகிய 9 இஸ்லாமியர்களை இந்துத்வ கும்பல் திட்டமிட்டு கொன்றுக் குவித்துள்ளது. மேலும், இந்துத்வ கும்பலின் வாட்ஸ் அப் குழுவில் இருந்ந்த 125 பேரில் 47 பேர் மார்ச் 8ம் தேதி வெளியேறியிருக்கிறார்கள்.
இதில் முதலில் குற்றஞ்ச்சாட்டப்பட்டுள்ள லோகேஷ் சோலங்கி தான் அனுப்பிய செய்திகளை அழித்துவிட்டு குழுவில் இருந்து வெளியேறியிருக்கிறார். ஆனால் தீபக் சிங் என்ற மற்றொருவரின் போனில் இருந்து லோகேஷ் சோலங்கியின்செய்திகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தான் 2 முஸ்லிம்களை கொன்று வடிகாலில் வீசியதை அந்த குழுவில் லோகேஷ் சோலங்கி தெரிவித்ததும் தெரியவந்துள்ளது என என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக விசாரிக்க ஜூலை 13ம் தேதி பரிசீலிக்கப்படும் என மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!