India
தாக்குதலுக்கு முன்பே தற்காப்பு படைவீரர்களை குவித்த சீனா - வெளியானது புதிய சர்ச்சை!
இந்திய சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய சீன படைவீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தர். அதேப்போல் சீன படைவீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 1996ம் ஆண்டு இருநாடுகளுடையே போடப்பட்ட ஒப்பந்தம் காரணமாக துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. அதனால் கற்களைக் கொண்டும், இரும்பு கம்பிகள் கொண்டும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு எல்லையில் இரண்டு நாட்டு ராணுவவீரர்கள் மோதலில் ஈடுபட்டது இந்தியா - சீனா தவிர உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இந்த மோதல் குறித்து இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் மாறிமாறி குற்றம் சாட்டி வருவதால் மோதலின் ஆரம்ப புள்ளி பற்றி தற்போதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், இந்த மோதல் நடந்த சிறிது நேரத்திற்கு முன்பாக சண்டை நடந்த இடத்தில் இருந்து 1,300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திபெத்தின் லாசா என்ற பகுதியில் சீனாவின் ஆயுதப் படையின் பிரிவில் தற்காப்புக் கலை வீரர்கள், மலையேறும் சாகச வீரர்கள் உள்ளிட்டோருடன் 5 புதிய படைப்பிரிவுகள் முகமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில், வரெஸ்ட் சிகர ஒலிம்பிக் ஜோதி ஓட்ட வீரர்கள், தற்காப்புக் கலை வீரர்கள், மலையேற்ற வீரர்கள் உள்ளிட்டோர் இருந்ததாக சீனாவின் தேசிய பாதுகாப்பு செய்தி பத்திரிகையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, புதிய படைப்பிரிவின் அணிவகுப்பு நடந்ததைச் சீன தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத பகுதியில் தற்காப்புக் கலை வீரர்களை சீனா அதிக அளவில் குவித்துருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!