India
“மோடி அரசு விசித்திரமான ஈகோ பிடித்த அரசு- அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைக்காதது ஏன்”: ஆம் ஆத்மி கேள்வி
இந்தியா - சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்தார்.
ஆனால், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கோபமடைந்துள்ளன. இதுபெரும் சர்ச்சையாக மாறியதை அடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தேஜஷ்வி யாதவ் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய தேஜஷ்வி யாதவ், “எந்த அடிப்படையில் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அளவுகோல் என்ன? பிகாரில் பெரிய ராஷ்ட்ரிய ஜனதா தளம், நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பில்லை, நாட்ட உலுக்கும் சீனாவுடனான மோதல் விவகாரத்தில் எங்களுக்கும் கருத்து உள்ளதே, ஏன் அழைப்பில்லை? ராஜ்நாத் சிங் விளக்குவாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், “மோடி அரசு விசித்திரமான ஈகோ பிடித்த அரசு. ஆம் ஆத்மி டெல்லியில் ஆளும் கட்சி, பஞ்சாபில் எதிர்க்கட்சி. அப்படி இருக்கையில், சீனா எல்லை மோதல் போன்ற முக்கிய விவகாரத்தில் ஆம் ஆத்மியின் கருத்துகள் தேவையில்லையா?” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !