India
“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரூ.103ல் மாத்திரை ரெடி; 4 நாட்களில் நல்ல முன்னேற்றம்” - DGCI அனுமதி!
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஃபேவிபிராவிர் என்ற மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் உலகம் முழுவதும் சுமார் 1,50,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா சிகிச்சைக்கு ஃபேவிபிராவிர் என்ற மருந்தின் மூலம் நல்ல பலன் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இம்மருந்தை மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.
லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களிடத்தில் இந்த மருந்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்த்ததில் 88 சதவிகிதம் வரை வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேவி ப்ளூ என்ற பெயரில் இந்த மாத்திரையை கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூபாய் 103 எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மருந்துக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று வழங்கியுள்ளது.
இந்த மருந்து குறித்து கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனத்தின் தலைவர் கிளென் சல்தானா கூறுகையில், “இந்தியாவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் மருந்திற்கு அனுமதி கிடைத்திருப்பது ஆறுதலான விஷயம். இம்மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நான்கு நாட்களில் நோயாளியிடம் நல்ல முன்னேற்றத்தினை காண முடியும்.
இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து என்பதால் எளிதானது. நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு இம்மருந்தினை விரைவாக கொண்டு சேர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?