India

மோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலையை எழுதிய பத்திரிகையாளர் மீது வழக்கு: உ.பி அரசு அட்டூழியம்!

ஊரடங்கு காலத்தில் மோடியின் வாரணாசி தொகுதியில் மக்கள் உணவும் நிதியும் இல்லாமல் இன்னல்களில் உள்ளனர் என ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ஸ்க்ரால் இதழின் சுப்ரியா சர்மா மீது யோகி அரசாங்கம் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 381,091 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் அடிப்படையில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

ஆனால் பிரதமர் மோடி இன்னமும் கூட நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. இந்தியா மக்கள் தொகை மிகுந்த நாடு என்றும், மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அடுத்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்தும் விசயத்தில் உலக நாடுகள் நம்மை ஆச்சரியமாகப் பார்க்கின்றன. பல நாடுகள் இதைப் பற்றித்தான் விவாதிக்கின்றன என்றெல்லாம் சுயதிருப்தியின் எல்லைக்கே செல்கிறார்.

இதுஒருபுறம் இருக்க, ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதற்த்திற்கு உதவு நடவடிக்கைகளை கையாள்வதில் மத்திய அரசு முழு தோல்வியடைந்துள்ளது. அதுவும் பிரதமர் மோடியில் சொந்த தொகுதியான வாரசியிலேயே அரசு தனது தோல்வியை அடைந்துள்ளது. இந்த தோல்வியை அரசு ஒப்புக்கொள்ள மறுத்தாலும் மக்கள் அவ்வோது வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் அவரால் தத்தெடுக்கப்பட்ட கிராமம் ஒன்றில் தோல்வியடைந்த பொது விநியோகத் திட்டத்தால் மக்கள் பட்டினி கிடக்கும் நிலை குறித்து ஸ்க்ரால் இதழின் பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா எழுதியிருக்கிறார்.

இதனைப்பொறுத்துக்கொள்ளாத உத்தர பிரதேச அரசு அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக போலி புகார்களை தயார் செய்து திட்டமிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா யோகி அரசு வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்” - ஊர் பெயர் மாற்ற அரசாணையை திரும்பப் பெற்றது அ.தி.மு.க அரசு!