India
ஒரே நாளில் 12,881 பேர் பாதிப்பு; 334 பேர் பலி: இனியும் வீண் பெருமை பேசாமல் விழித்துக்கொள்ளுமா மோடி அரசு?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 8,406,062 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 451,384 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 2,234,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 119,941 பேர் பலியாகினர்.
இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவைத் தொடர்ந்து 4-வது இடத்தை பிடித்ததுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் பாதிப்பு 3,66,946 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,237 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 334 பேர் பலியாகியுள்ளனர். 7390 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா உலக அளவில் நான்காவது இடத்திற்குச் சென்றுள்ளது நாட்டு மக்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
பிரதமர் மோடி உலக நாடுகளே இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையை பாராட்டுவதாக சொல்லும் வேலையில், உலகில் மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா சென்றிருப்பது பிரதமர் சொன்ன கூற்று பொய் என தெரிவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இனியும் பிரதமர் மோடி தற்பெருமை பேசாமல் நடவடிக்கை எடுப்பாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!