India
“100 வயது மூதாட்டியை கட்டிலோடு இழுத்துச் சென்ற மகள்” - அதிகாரி அறிவுறுத்தலால் ஏற்பட்ட அவலம்!
வங்கியில் பணம் பெறுவதற்காக, வயதான மூதாட்டியை அவரது மகள் கட்டிலோடு இழுத்துச் சென்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் நோபடா மாவட்டம், பாரகன் கிராமத்தைச் சேர்ந்தவர் லாபே பாகெல். 100 வயதைக் கடந்த இந்த மூதாட்டி, வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக உள்ளார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள ஏழைப் பெண்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி லாபே பாகெலின் ஜன் தன் வங்கிக் கணக்கில் மத்திய அரசு சார்பில் ரூ.1,500 பணம் செலுத்தப்பட்ட நிலையில், அவரால் எழுந்து நடக்க முடியாததால் அவரது 70 வயது மகள் குஞ்சா, வங்கிக்குச் சென்று பணத்தைப் பெற முயன்றுள்ளார்.
வங்கி அலுவலர் அஜித் பரதன், பயனாளியை நேரில் பார்த்தால் மட்டுமே பணம் வழங்குவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து வேறு வழியில்லாத அவரது மகள், கடந்த 11-ம் தேதி தனது தாய் லாபே பாகெலை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்துச் சென்றார்.
உதவிக்கு வேறு யாரும் முன்வராத நிலையில், அவரது வீட்டில் இருந்து வங்கி அலுவலகம் வரை 100 வயது தாயை அவரே கட்டிலில் மெதுவாக இழுத்துச் சென்றார். இதை நேரில் பார்த்த வங்கி அதிகாரி அஜித் பரதன், உடனடியாக ரூ.1,500 பணத்தை வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
Also Read
-
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா?... பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி !
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !