India
“தனிமை வார்டில் இருந்ததால் மன உளைச்சல்” : கேரளாவில் இரண்டு கொரோனா நோயாளிகள் தற்கொலை!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் முழுவதும் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. இந்தியாவில் கொரோனா பாதித்த முதல் மாநிலமான கேரளாவில் முழுமையாக பாதிப்பு குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
குறிப்பாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்தவர்களால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 65 பேர் பாதிக்கப்பட்டிருப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் 1238 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 905 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்புள்ளனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் சிகிச்சைப் பெற்றுவந்த 2 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆநாடு பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி. கடந்த மே 29ம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்.
பேருந்தில் ஏறி தனது சொந்த ஊருக்குச் சென்ற உண்ணி மருத்துவமனை உடையுடன் வந்ததைக் கண்ட ஊர் மக்கள் இதுதொடர்பாக போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மருத்துவ குழுவினர் மற்றும் போலிஸார் உண்ணி வீட்டிற்கு சென்று அவரை சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த உண்ணிக்கு நேற்று கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட்டில் வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அவரை வீட்டிற்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.
இதனிடையே உண்ணியைக் கவணித்துவந்த செவிலியர் அவர் வீட்டிற்குச் சென்றதும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளை எடுப்பதற்காக சென்றபோது, தனிமை வார்ட்டில்தூக்கில் தொங்கிய நிலையில் துடித்துக்கொண்டிருந்த உண்ணியை மீட்டு சிகிச்சை அளித்தப்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குடி பழக்கம் இருப்பதால்தான் முன்பே அவர் தப்பித்துச் சென்றதாகவும், அவருக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தற்கொலை செய்துக்கொண்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நெடுமங்காட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் இருந்து ஊர் திரும்பிய முருகேசன் கொரோனா பாதிப்பு இருந்ததையடுத்து தனிவார்டில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் மதிய உணவு நேரத்தின் போது சோகத்தில் இருந்த முருகேசன் மாலை தனது தனியறை கதவுகளை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?