India
“ஓராண்டுக்கு புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது” - கொரோனாவை காரணம் காட்டி மத்திய பா.ஜ.க அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக அடுத்த ஓராண்டுக்கு எந்தவிதப் புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் ஒரு வருடத்திற்கு அறிவிக்கப்படாது. பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு மட்டுமே செலவு அனுமதிக்கப்படும்.
இவை தவிர இந்த நிதியாண்டில் வேறு எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கக் கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்னரே மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரத் திட்டங்களால் பொருளாதார நிலை சரிவைச் சந்தித்ததோடு, அரசின் நிதி நிலைமையும் மோசமான சூழலைச் சந்தித்தது. தற்போது, கொரோனாவை காரணம் காட்டி தங்கள் போதாமைகளை பா.ஜ.க அரசு மூடி மறைக்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்