India
இந்தியாவின் பெயரை மாற்ற சட்டமா? - இந்துத்வ கும்பலின் வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி!
மத்திய ஆட்சியில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க தனது இத்துத்வா மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை இந்தியாவில் நிறுவ வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கல்வியில் தொடங்கி உணவு விநியோகிப்பது வரை இந்திய மக்கள் என்ன படிக்கவேண்டும், எதை சாப்பிட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறது.
மோடி அரசின் இத்தகைய முயற்சிகளை ஜனநாயக அமைப்புகள் கடுமையாக எதிர்த்து போராடியும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் வருகிறார்கள். ஆனால் தனக்கிருக்கும் பெரும்பான்மைப் பலத்தால் தனது நோக்கங்களை படிப்படியாக பா.ஜ.க அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகளின் ஒன்றான இந்தியாவின் பெயரை பாரதம் மற்றும் இந்துஸ்தான் என மாற்றவேண்டும் என்பதுதான். அதன்மூலம் இந்தியாவை இந்துக்களுக்கு உரிய நாடு என்று கூறும்படியாக இருக்கும் என இந்த கோரிக்கையை தொடர்ந்து முன்வைகிறார்கள்.
தற்போது அதேக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியாவின் பெயரை மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் நமாகா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “இந்தியா" என்ற பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும், நாட்டு மக்கள் காலனி ஆதிக்க சிந்தனையில் இருந்து வெளிவர நாட்டின் பெயரை "பாரத்" என மாற்ற வேண்டும்.
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் கடுமையான போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நமது தேசத்தின் பெயரை மாற்ற வேண்டும் என கோரியுள்ள அவர், "இந்தியா" என்ற நமது நாட்டின் ஆங்கில பெயரை "பாரத்" என மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஒரு சமூக தரப்பினர் ஏற்றவகையில் இருப்பதால் மதச்சார்பற்ற நாட்டிற்கு அடையாளமாக உள்ள இந்தியா என்ற பெயரை மாற்றக்கூடாது, இந்த வழக்கைத் தள்ளுப்படி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர், இந்தியா என்ற பெயர் கிரீக் மொழியில் உள்ள இண்டிகா என்ற வார்த்தையில் இருந்தே சூட்டப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், இதற்கு சட்டத்தை கொண்டுவரும்படி நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக உரிய அமைச்சகத்தை அணுகும்படி அறிவுறுத்தினர். மேலும், இதனை கோரிக்கையாக மட்டுமே கருதி அரசு முடிவெடுக்கும்படி உத்தரவிட்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!