India

“பேரிடருக்காக நிதி வசூலித்துவிட்டு பொதுநிறுவனம் இல்லை என்பதா?” - டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!

பி.எம் கேர்ஸ் நிதியம் பொது நிறுவனம் அல்ல என்பதால் அதற்கு வரும் நன்கொடை, அதிலிருந்து செலவிடும் விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தர இயலாது என்று பிரதமர் அலுவலகம் அண்மையில் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுரேந்தர் சிங் கூடா என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்காக செலவிடும் அவசரகால நிதி என்று கூறி இந்த நிதியம் தொடங்கப்பட்டது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ராணுவத்தினர், நிதித்துறையில் உள்ளவர்கள், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் என்று பல மாநிலங்களிலிருந்தும் நிதி வழங்கிவருகிறார்கள். இதுவரையிலும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்துள்ளது.

ஒரு பொதுப் பயன்பாட்டுக்காக வசூலிக்கப்படும் நிதியை நிர்வகிக்கும் அமைப்பு பொது நிறுவனம் அல்ல என்று கூறி தகவல்களை மறுப்பது சட்டவிரோதமானது. தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளுக்கு எதிரானது.

எனவே, அதன் நிர்வாகிகள் யார், யாரிடமிருந்து எவ்வளவு நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது. இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்கிற விபரங்களை இணையதளத்தில் வெளியிட உததரவிட வேண்டும். பி.எம்.கேர்ஸ் நிதியத்தை பொது நிறுவனமாக அறிவிக்கவேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூன் 10 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: PM CARES நிதி குறித்து கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை : RTI கேள்விக்கு பதில் அளிக்காத அரசு