India

“கொரோனா தொற்று சமூக பரவலை அடைந்துவிட்டது” - இந்தியாவின் நிலையை பகிரங்கப்படுத்திய நிபுணர்கள்! #Corona

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டும், கொரோனா பரவல் 2 லட்சத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கொரோனா பாதித்துள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

68 நாட்களை கடந்த பின்னும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்தாலும், மத்திய மாநில அரசுகளோ, இன்னும் 2வது நிலையில்தான் கொரோனா தொற்று உள்ளது. சமூக பரவல் என சொல்லக்கூடிய 3வது நிலையை இந்தியா அடையவில்லை என கூறி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தொற்றுநோயியல் நிபுணர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 3வது கட்டமான சமூக பரவல் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது என பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டத்தில் நோய் பரவலை ஒழித்துவிட முடியும் என எதிர்ப்பார்ப்பது சாத்தியமில்லாதது. பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவம், சமூக விஞ்ஞானிகள், தொற்றுநோயியல் போன்ற துறைகளில் நிபுணத்துவ வல்லுநர்களுடனான ஈடுபாடு குறைவாகவே இருந்ததால் நோய் பரவுதல் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், மத்திய அரசோ, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. இதனால், மேலும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. முன்னதாக உலக சுகாதார அமைப்பும், ஊரடங்கில் தளர்வுகளை மேற்கொண்டால் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மோடி அரசின் நான்கு கட்ட ஊரடங்கு மிகப்பெரிய தோல்வி” - ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு! #Lockdown