India
கொரோனா நோயைப் போக்க மனித தலையை வெட்டி நரபலி கொடுத்த கொடூரம் - ஒடிசாவில் கோயில் பூசாரி கைது!
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சுழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல கும்பல்கள் போலி செய்தி மற்றும் வந்திகளை பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது ஒடிசாவில் கொரோனா நோயை குணப்படுத்த நரபலி கொடுத்த சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டக்கில் உள்ள இந்துமத கோயிலில் பூசாரியாக இருப்பவர் சன்சரி ஓஜா. 72 வயதான சன்சரி ஓஜா நேற்றைய தினம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரிடம் கொரோனா ஒழிய உன்னை கடவுள் பலிக் கொடுக்கம் படி கூறிதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர் பூசாரி சொன்னதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பக்தர் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாத பூசாரி, அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் கிழே சுருண்டு விழுந்த பக்தரின் தலையை துண்டித்து சாமி சிலையின் முன்பு வைத்துவிட்டு காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
பின்னர் இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்த பூசாரி சன்சரி ஓஜா, “கடவுள் என் கனவில் வந்து கட்டளையிட்டதால் நரபலி கொடுத்ததேன்” என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன போலிஸார் கோயில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனியடையே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பூசாரியிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பலியான நபருக்கும் பூசாரிக்கு ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாகவும், அதற்காக அவர் பலி தீர்க்க இதுபோல நடகத்தை நடத்தியதாக போலிஸார் கண்டுபிடித்தனர். கொலை செய்தபோது பூசாரி மதுபோதையில் இருந்ததாகவும், பின்னர் கொலையை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?