India

“ஊரடங்கால் இந்தியாவில் 1.2 கோடி பேர் வறுமையின் உச்சத்திற்கு செல்வார்கள்” : உலக வங்கி ஆய்வில் தகவல்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, உற்பத்திக் குறைவால் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நிறுவனங்கள் பலவும், வருமான இழப்பை ஈடுகட்ட ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் அது மக்களை நேரடியாக பாதித்து வருகிறது.

இதனிடையே இந்த ஊரடங்கால் 1.2 கோடி பேர் இந்தியாவின் வறுமையின் உச்சத்துக்கே சென்றுவிடுவார் என ஆய்வுன் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரபட்ட ஊரடங்கால் உலக பொருளாதாரம் பெரும் சீரழிவை சந்தித்துள்ளது.

அதனால் உலக அளவில் 4.9 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்படுவார்கள். அதில் இந்தியாவில் மட்டும் 1.2 கோடி பேர் வறுமையின் உச்சத்துக்கே சென்றுவிடுவார். இந்த பாதிப்புகளை சந்திக்கபோகும் மக்கள் ஒருநாளைக்கு 140க்கு கீழ் குறைவான வருவாயை ஈட்டுபவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளால், இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்படக்கூடும் என ‘சேவ் தி சில்ட்ரன்’ மற்றும் ‘யுனிசெப்’ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “2020 முடிவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்படுவார்கள்” - UNICEF ஆய்வில் எச்சரிக்கை!