India
வழி மாறி வேறு மாநிலம் சென்ற ரயில்கள் : பயணத்தின் போதே பசியால் உயிரிழப்புகள் - மோடி அரசின் பதில் என்ன ?
கொரோனா வைரஸ் பரவலைக் தடுப்பதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கால் நடையாகவோ, வாகனங்களிலும் பயணம் செய்துவந்தன.
அப்படி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் வழியிலேயே விபத்து மற்றும் உடல் நலம் பாதிப்பால், 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க எதிர்கட்சிகள் வழியுறுத்தியதன் பேரில் கடந்த 15 நாட்களாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்குத் அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வசாட் ரயில் நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் செல்ல ரயில், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இது ரூர்கேலா வேண்டிய ரயில் தான் என்று குழப்பமான பதிலை அதிகாரி தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் இதுதொடர்பான செய்து வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகு இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே, “சிறப்பு ரயில் வழக்கமான வழிதடங்களில் இல்லாமல் சில வழிதடங்களில் மாற்றி இயக்கப்படுகிறது. அதனால் ஓட்டுநர் குழப்பமடைந்திருக்கலாம்” என கருதுகிறோம் என்று தெரிவிவித்துள்ளது.
இதனிடையே ரயில் இருந்த தொழிலாளர்களிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் உத்தர பிரதேசம் செல்லவேண்டிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசா ரயில் நிலையத்தில் உணவின்றி தவித்து வருகின்றனர். இதுபோல பிரச்சனை ஏற்பட்டது முதல் முறையல்ல எனக் கூறப்படுகிறது
இதுதொடர்பாக ரயில்வே சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,“முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து 1,200 பேருடன் பீகார் கிளம்பிய ரயில் தடம் மாறி புது டெல்லிக்கு சென்றது. மகாராஷ்டிராவின் வசாயில் ரோடில் இருந்து பாட்னா நோக்கி 1,000 பேருடன் கிளம்பிய ரயில் ஒடிசாவின் ரூர்கேலா சென்றது.
ரயில்வே தடங்களில் கடுமையாக ட்ராபிகாக இருப்பதால் நாங்கள் தான் தடத்தை மாற்றிவிட்டோம் என்கிறது மோடி அரசு. இந்தியாவில் தினசரி 14,300 ரயில்கள் ஓடும் போது ஏற்படாத ட்ராபிக் இப்பொழுது ஓடும் 100 ரயில்களினால் ஏற்படுகிறதா?
இது போல் 40 ரயில்கள் 50,000 வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு டேக் டைவர்சன் டேக் டைவர்சன் என எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று ரயில்வே துறைக்கே தெரியவில்லை. இந்த ரயில்களில் 60 மணி நேரத்திற்கும் மேலாக பட்டினியாக இருந்ததில் 10 பேர் இறந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?