India
“மோடி அரசின் திட்டம் உடனடி பொருளாதாரத்தில் எதிரொலிக்காது; GDP -5%தான் இருக்கும்” : ஆய்வு நிறுவனம் தகவல்!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நான்காவது முறையாக மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், 2020-21 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி, மைனஸ் 45% என்ற அளவிற்கு சரிவைச் சந்திக்கும் என்று “கோல்டுமேன் சாச்ஸ்” நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. முன்பு, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மைனஸ் 20 சதவிகிதமாகவும், முழு நிதியாண்டில் மைனஸ் 0.4 சதவிகிதமாகவும் ஜி.டி.பி வளர்ச்சி இருக்கும் என்று சாக்ஸ் மதிப்பிட்டிருந்தது.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மைனஸ் 5 சதவிகித வளர்ச்சியையே பெறும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் உடனடியாக பொருளாதாரத்தில் எதிரொலிக்காது. மேலும் , உலக வங்கி கணிப்பின் படி, மொத்த ஜி.டி.பி விகிதத்தில் 10 சதவிகிதம் தான் ஊக்குவிப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை” என்று கூறியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!