India

“கொரோனா வைரஸ் செயல் இழந்தால் கூட மூன்று மாதங்கள் தொண்டையில் இருக்கும்” : ஐ.சி.எம்.ஆர் அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் செயல் இழந்தால் கூட மூன்று மாதங்கள் வரை தொண்டையில் காணப்படலாம் என்று ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் நோயாளிகளை வீடுகளுக்கு அனுப்புவதில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அவர்கள் பத்து நாட்களுக்குப் பின் வீடுகளுக்குச் செல்லலாம். மீண்டும் ஒரு பி.சி.ஆர் கொரோனா சோதனை தேவை இல்லை என்று விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் கங்கா கெட்கர் கூறியுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படியில் சிலருடைய தொண்டையில் செயல் இழந்த கொரோனா கிருமிகள் மூன்று மாதங்கள் வரை தென்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் நிலை ஆரோக்கியமாக உள்ளவர்கள் அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

அதன் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாக கங்கா கெட்கர் கூறியுள்ளார். அதன் படி 10 நாள் சிகிர்ச்சைக்குப் பின் கடைசி 3 நாட்கள் காய்ச்சல் இல்லாதவர்கள் வீடுகளுக்கு செல்லலாம் என்று அவர் கூறியுள்ளார். பின்னர் வீடுகளில் ஒருவாரம் தனிமையில் இருந்தால் போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: தொடர்ந்து ‘பப்ஜி’ கேம் விளையாடிய இளைஞருக்கு மாரடைப்பு - விபரீதம் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!