India

“#DholeraSmartCity போல 20 லட்சம் கோடியும் வாயில் சுட்ட வடையா?” : மோடியின் பொய்களை கலாய்க்கும் மக்கள் !

உலகை அச்சுறுத்திய கொரோனா பாதிப்பு இந்தியாவில் தனது தீவிரத் தன்மையைக் குறைத்துக்கொள்ளவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் இறுதியில் தொடங்கிய ஊரடங்கை 3 வது கட்டமாக நீடித்துள்ளது மத்திய அரசு. தற்போது அந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் மே 17-ம் வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘சுயசார்பு பாரதம்’ என்ற தொகுப்பை அறிமுகப்படுத்தினார்.

மோடி அரசின் இந்த அறிவிப்பு வழக்கம்போல மாயஜால வார்த்தைகளுமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, தொழில் அதிபர்கள் மாநாட்டில் பேசினார். அப்போது, அகமதாபாத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் தொலேரா (Dholera) என்ற நகரத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தார். இந்த தொலேரா டெல்லியை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் என்றார்.

ஷாங்காய் நகரத்தை விட ஆறு மடங்கு பெரியதாக இருக்கும் என்றார்.

டெல்லியின் பரப்பளவு 1,494 கிலோ மீட்டர். ஷாங்காயின் பரப்பளவு 6,341 கிலோ மீட்டர். இந்த திட்டம் உருவாக்கப்பட குஜராத் அரசு வகுத்த திட்ட அறிக்கையின்படி, தொலேரா நகரத்தின் மொத்த பரப்பளவு 580 கிலோ மீட்டர். ஆனால், இன்னும் தொலேரா நகரம் உருவாகவில்லை.

இதையும், தற்போது மோடி 20 லட்சம் கோடி வழங்குவதாக பேசியதையும் ஒப்பிட்டு, ட்விட்டரில் மோடியை வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று, ட்விட்டரில் #DholeraSmartCity என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

மோடியின் தொலேரா ஸ்மார்ட் சிட்டியில் இவர்தான் நிதி அமைச்சர், அந்த நகரத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று சங்கிகள் கதறும் வகையில் வெளுக்கின்றனர் நெட்டிசன்கள்.

Also Read: “ரூ.20 லட்சம் கோடி பிரம்மாண்ட அறிவிப்பு - ஆனால் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட தரமாட்டார்கள்” : ப.சிதம்பரம்