India
தூய்மை பணியாளர்களுக்கு மலர் தூவி ‘டாட்டா’ காட்டிய இந்தியா - மாதம் 1,35,000 ரூபாய் ஊதியம் அறிவித்த கனடா!
கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் உலகம் முழுவதும் உள்ள மக்களை படாதப்பாடு படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருப்பினும் சீனா, அமெரிக்கா, கனடா என பல நாடுகள் மக்களின் பொருளாதார பிரச்னையை தீர்க்கும் வகையில் நிதி ஒதுக்கி வருகின்றன.
அதன்படி, சமீபத்தில் கனடா அரசு அந்நாட்டு மக்களின் வேலையை உறுதி செய்தது. எந்த நிறுவனமும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, கொரோனா அவசரகாலத்தை எதிர்கொள்ள 82 பில்லியன் டாலரை கனடா அரசு ஒதுக்கியது.
இந்நிலையில் கொரோனா வைரஸால் கனடாவில் 67,702 பேர் பாதிக்கப்பட்டனர். 4,693க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் போன்ற அத்தியாவசிய பணியாளர்கள் தங்களின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் தன்னலமற்ற பணிகளை பாராட்டும் விதமாக கனடா அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. அதற்காக அந்நாட்டு அரசு மாகாணங்கள் மற்றும் பிரதேச அரசுகளிடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
அந்த ஒப்பந்தம்படி, 300 பில்லியர் டாலர் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்மூலம் அத்தியாவசிய பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதத்துக்கு 1,800 டாலர்( இந்திய ரூபாய் மதிப்பில், 1,35,000 ரூபாய்) வழங்க நடவடிக்கை எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “கொரோனா தடுப்பு பணியில் தங்களது உயிரைப் பயணம் வைத்து அத்தியாவசிய பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வேலைக்கு அவர்கள் பெறும் ஊதியம் குறைவுதான்; எனவேதான் சம்பள உயர்வை அறிவித்துள்ளோம். அரசின் சம்பள உயர்வுக்கு அத்தியாவசிய பணியாளர்களே தகுதியானவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கனடா அரசின் இந்த அறிவிப்பு அந்நாட்டு அத்தியாவசிய பணியாளர்கள் பெறும் வரவேற்பை அளித்துள்ளனர். பிரதமரின் இந்த முடிவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
கனடா பிரதமரின் இந்த அறிவிப்புகள் நாடுகளை கடந்து மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவை எதிர்த்து பணியாற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மோடி அரசு அறிவித்துள்ள நிவாரணம் என்பது மிகவும் குறைவே என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்காத இந்த அரசாங்கம் மலர் தூவி ‘டாட்டா’ காட்டி வருகிறது என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!