India
குணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சோதனை தேவை இல்லையாம் : விபரீதம் தெரியாமல் விளையாடும் மோடி அரசு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அதேபோல, பலியானோர் எண்ணிக்கை 1,783ல் இருந்து 1,886 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,390 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
இந்நிலையில், கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் கிட் சோதனையும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது. அதுவும் நாளொன்றுக்கு சராசரியா ஒரு லட்சம் என்ற அளவுக்கே உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா நோய் பாதித்தவர்கள் குணமடைந்ததை உறுதி செய்ய மீண்டும் சோதனை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுவரை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லை என்ற நிலையில் அவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்தப்பட்டு தொற்று முழுமையாக குறைந்துவிட்டது என்பதை உறுதிசெய்த பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் தற்போது மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1,273 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். 104 பேர் உயிரிழந்துள்ளனர்.
216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 42 மாவட்டங் களில், கடந்த 28 நாட்களில் புதிய நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை. 29 மாவட்டங்களில், கடந்த 21 நாட்களில் தொற்று கண்டறியப்படவில்லை, 36 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களில் தொற்று கண்டறியப்படவில்லை. 46 மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களில் தொற்று கண்டறியப்படவில்லை.
ஊரடங்கு தளர்வுகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை நாம் வாழ்க்கை முறை மாற்றங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இது மிகப்பெரிய சவால்தான். மக்கள் தான் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வாலின் இந்த பேட்டி நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொடிய நோயால் மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்துவருகின்றனர்.
இந்த சூழலில் இருந்து மீட்டுக்கொண்டுவரவேண்டிய அரசு இதுபோல சொல்வது இனி மக்களை பற்றி அரசு கவலைப்படாமல் கை விரித்துவிட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பலரும் எண்ணுகின்றனர்.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?