India
“15 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே உணவு நிவாரணம் கிடைத்துள்ளது”: மோடியின் வெற்று அறிவிப்பு அம்பலம்!
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
அரசின் நிவாரணம் போதாத நிலையில் ஏழை மக்கள் உணவின்றி பெரும் துயரங்களை சந்திக்கின்றனர். இந்த பொரும் துயரங்களுக்கு அரசின் நிவாரணமும் முழுமையாக சென்றடையாதேக் காரணம் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், அது உண்மை என நிரூபிக்கும் வகையில், மத்திய அரசின் கொரோனா வைரஸ் நிவாரண நலத்திட்டங்களின் படி உணவு தானிய நிவாரணப்பொருளில் பருப்பு தலா 1 கிலோ வீதம் 15 சதவீதக் ஏழைக் குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறையே தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய இன்னும் ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடைய இன்னும் ஒருவாரக் காலமே இருக்கும் நிலையில், பிரதமர் கரீப் கல்யாண் யோஜனாவின் திட்டம் படி ஏப்ரல் மாத்திற்கு 19 கோடி குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டிய 1.96 லட்சம் டன்கள் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களில் வெறும் 30,000 டன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது 15% ஏழைக்குடும்பங்களுக்கு மட்டுமே அரசின் ஒரு கிலோ பருப்புச் சென்றுள்ளது. இந்த தகவலை நுகர்வோர் விவகாரத் துறையே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “விநியோக நடைமுறை அளவில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது.
பெரும்பாலும் லாரிகள் மூலம் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. 4 வாரங்களில் 2 லட்சம் லாரி டிரிப்கள் தேவைப்படும் அதுவும் லாக் டவுன் காலத்தில் மில்கள் பலவும் ஹாட்ஸ்பாட்களில் உள்ளதால் பெரும் சிரமங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read: “ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை” : மோடி அரசை விமர்சிக்கும் கே.எஸ்.அழகிரி!
அரசு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதற்கு முன்பே இதற்கான திட்டத்தை வகுத்து இருக்கவேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் திட்டத்தை மட்டும் அறிவித்துவிட்டு மக்களுக்கு அதை செயல்படுத்தாமல் இருப்பது பெரும் அலட்சியமாகும். இது மோடியில் வெற்று அரவிப்பை அம்பலப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?