India
“மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஜாமீன் இல்லை - 7 ஆண்டுகள் சிறை” : அமலுக்கு வந்தது அவசர சட்டம் !
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் பணியில் இருந்து மருத்துவத்துறையை சேர்ந்த ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அப்படி பணியாற்றும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. குறிப்பாக PPE - என்று சொல்லக்கூடிய பாதுகாப்பான தற்காப்பு உடைகள் போன்றவை இல்லாமல் மருத்துவர்களும் செவிலியர்களும் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். சில இடங்களில் பிளாஸ்டிக் ரெயின் கோர்ட் ஆடையை அணிந்து மருந்துவம் பார்க்கின்றனர்.
இதனால் நாட்டில் பல பகுதியைச் சேர்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி சில இடங்களில் மருத்துவர்களை அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யவும் வலியுறுத்துகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்கள், சடலமான பின்னர் அவர்களின் உடல்கள் பல மோசமான சூழலை சந்திக்கும் சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளது. இதற்கு எல்லாம் ஒருபடி மேலச் சென்று பணியாற்றும் மருத்துவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நாடுமுழுவதும் நடைபெறுகிறது.
இந்த கொடூரச் சம்பவம் ஏதோ இப்போது தொடங்கியது அல்ல; முன்பிருந்தே தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய சூழலில் இந்த தாக்குதல் என்பது இன்னும் அதிகரித்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுக்காப்பற்ற சூழலே நிலவுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கை மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும், மருத்துவமனைகளையும் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரவேண்டும். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சமூக நிலைமைகளையும் உருவாக்கிட வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இதுதொடர்பான அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்றைய தினம் கொண்டுவந்தது. அந்த சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அந்த சட்டத்தின் படி, மருத்துவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தால் அடுத்து சில மணிநேரங்களில் தாக்குதல் நடத்தியவர் ஜாமீனில் வெளிவாராத படி கைது செய்யப்படுவார்.
மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டணை, 5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் இந்த அவசர சட்டம் கொண்டு வரவப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. அதுதொடர்பான அரசிதழிலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !