India

வெறுப்பை கக்குவோருக்கு அன்பை போதிக்கும் இஸ்லாமியர்கள் - பிளாஸ்மா தர முன்வரும் மனிதநேயம் !

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல வகையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்க மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன.

மேலும் பல மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் துரிதமான பரிசோதனையை மேற்க்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனாவை ஒழிக்கும் முறையை சோதனை செய்ய பல மாநில மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் இருந்து ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எடுக்கப்பட்டு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உடலில் செலுத்தப்படும்.

முதல் முறை உடலுக்குள் புதிதாக ஒரு நோய் வரும் போது, அதை எப்படி எதிர்த்து சமாளிப்பது என உடலுக்கு தெரியாது. ஆனால், நோய் குண்மான போது அந்நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உடல் உருவாக்கியிருக்கும். அடுத்து முறை நோய் தாக்கும் போது, திறனுடன் எதிர்த்து சண்டையிடும்.

அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலி, இந்த வைரஸை எதிர்க்கும் திறன் கொண்ட எதிர் அணுக்கள் அல்லது பிளாஸ்மா இருக்கும். இந்த எதிர் அணுக்களை எடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செலுத்தும் போது அவரது உடலில் உள்ள வைரஸ் தொற்றை அழிக்க முடியும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து விடுவார்.

இதற்காக ஒருவரின் உடலில் இருந்து 800 மி.லி. பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படும். ஒரு கொரோனா நோயாளிக்கு 200 மி.லி. அளவு பிளாஸ்மாதான் செலுத்தப்படும். குணமடைந்த நோயாளி ஒருவரிடம் இருந்து எடுக்கும் பிளாஸ்மாவை நான்கு நோயாளிகளுக்கு செலுத்தி குணமாக்க முடியும்.

இந்த பரிசோதனை முயற்சியை கேரளா மாநில அரசு 2 மருத்துவமனைகளில் தொடங்கி விட்டது. இந்த பிளாஸ்மாவை நோயாளிக்கு செலுத்தும்போது, பலருக்கு சரியாகியுள்ளது. இந்நிலையில் இந்த முறையை தமிழகத்தில் செயல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும் குணமடைந்தவர்கள் தாமாக முன்வந்து பிளாஸ்மா பரிசோதனைக்கு தங்களது அணுக்கள் அளிக்கவேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. குணமடைந்த பலர் தயக்கம் காட்டிய நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்ற இஸ்லாமியர்கள் பலர் சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இதுதொடர்பாக தேனியை சேர்ந்த முகமது உஸ்மான் அலி, திருப்பூரைச் சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர்கள் ஊநீர் தானம் செய்ய முன்வந்துள்ளனர். இதுகுறித்து வெளியான வீடியோவில் பேசிய அவர்கள், “நாங்கள் இப்போது பூரணமாக குணமந்துவிட்டோம். இந்நிலையில் தமிழக அரசு சமீபத்தில் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என கோரியிருந்தது.

அதற்கு தான் மட்டுமல்லாது தங்களுடன் மாநாட்டுக்கு வந்து பாதிக்கப்பட்டு தற்போது குணமந்தடைந்த அனைவரும் பிளாஸ்மாவை தர முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்டு அரசு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வேண்டும் என அரசிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களை குறி வைத்து விஷம கருத்துப் பரப்பிய இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் வாய் அடைத்து போயுள்ளனர்.

ஆனாலும் சில இந்துத்வாவாதிகள் அவர்களின் உடலில் இருந்து பிளாஸ்மாவை எடுக்கக்கூடாது என முட்டாள்தனாமான கருத்துகளையும் பரப்பி வருகின்றனர். இவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை இஸ்லாமியர்களின் மனிதநேயம் வென்றுள்ளது.

Also Read: “இந்துத்வா கும்பல் பரப்பும் வதந்தியால் வாழ்வாதாரம் இழந்த முஸ்லிம் வியாபாரிகள்” : டெல்லியில் கொடூரம்!