India

சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு - கொரோனா ஊரடங்கிலும் சுங்கச்சாவடிகளில் மோடி அரசு வசூல் வேட்டை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பின் அதிதீவிர பகுதிகள் தவிர்த்து, குறைவான பாதிப்பு உள்ள இடங்களில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இந்தத் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

இந்த ஊரங்கு அமலில் இருந்த நாளில் இருந்தே இந்தியாவின் ஒட்டுமொத்த தொழில்களும் முடக்கப்பட்டன. சிறு - குறு தொழில்கள் தொழிற்சாலைகள் நசிவுற்று தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பல மாநிலங்களின் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அரசின் சலுகை முழுமையாக பலரது வீடுகளுக்கு இன்னும் சென்றடைவில்லை. மக்கள் உணவின்றி வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஒருமாதத்திற்கு மேல் தொழில்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் வாகன ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தினறும் இந்த சூழலில், சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஏப்ரல் மாதம் ஆண்டுதொரும் சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமலுக்கு வரும். இந்த மாதம் ஊரடங்கு காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய கட்டணத்தின் படி 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சுங்க்கட்டணம் உயர்ந்துள்ளது வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பலரும் அரசின் இந்த அறிவிக்கு பல்வேறு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Also Read: அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் அளித்து இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறதா மோடி அரசு?