India

53 வயது பார்வையற்ற பெண்ணை வல்லுறவு செய்த மர்ம நபர் - ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த கொடூரம்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அரசு வங்கி மேலாளரான 53 வயது பார்வையற்ற பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அப்பெண்ணின் கணவர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கியுள்ளதால் இவர் குடியிருப்பில் தன் ஃபிளாட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஷாபுரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 53 வயது பார்வையற்ற பெண், நேற்று அதிகாலை மர்ம நபரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், அப்பெண்ணின் செல்போனை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பியுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக பாதுகாப்பு பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில் போலிஸார் இந்தச் சம்பவத்தில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க துப்பு கிடைக்காமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாடிப்படிகளை பயன்படுத்தி ஒரு நபர் 2வது தளத்துக்குச் சென்றதாக தெரியவந்துள்ளது. பால்கனி வழியாக நுழைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Also Read: 10 வயது சிறுமி பாலியல் கொலை- நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளில் நடந்த கொடூரம்!