India
9 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பா.ஜ.க தலைவர் : போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறை
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் திருப்பங்கோட்டூர் பாலதாயி பள்ளியின் ஆசிரியர் பத்மராஜன். இவர் பா.ஜ.கவின் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 17ம் தேதி 9 வயது குழந்தை மற்றும் அவரது தாயார் கண்ணூர் மாவட்டம் காவல்துறையை அனுகி புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், ஜனவரி 15ம் தேதிக்கு சில நாட்களுக்கு முன்னரும், பிப்ரவரி 02ம் தேதியன்றும் பத்மராஜன் பாலதாயி பள்ளியில் படிக்கும் தனது 9 வயதான குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
எனது குழந்தையைப் போல் பள்ளியில் படிக்கும் பல குழந்தைகளை பாலியல் வன்கொடுமையும், பாலியல் அத்துமீறலும் செய்துள்ளார். இதுவரை இதுதொடர்பாக சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சம்பவம் நடைபெற்ற அன்று, சிறப்பு வகுப்பு இருப்பதாக அழைத்துச் சென்று பள்ளியின் குளியல் அறையில் குழந்தையை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியுள்ளான். இந்த சம்பவத்தை தலசேரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்குச் சென்று குழந்தையிடம் வாக்குமூலம் பெற்றனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டனர்.
பின்னர் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளானது உறுதியானது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யும் கோரியும், தேவையான ஆதரங்கள் இருப்பதாக போலிஸாரிடன் குழந்தைகள் நலபாதுகாப்பு அதிகாரிகளும் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
ஆனால் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை பத்மராஜனை கைது செய்யாமல் காலம்கடத்தி வந்துள்ளனர். இததையடுத்து இதுகுறித்த புகார் கேரள முதல்வர் அலுவலகம் வரைச் சென்றது. இந்த சம்பவத்தால் அதிர்ந்துப்போன முதல்வர் அலுவலகம் உடனே போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டது.
அதற்கு பத்மராஜன் தலைமறைவாக, அவரை தனிப்படை அமைத்து போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கையை தாமதப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !