India
“தொற்று உறுதியான கேரள மாணவிக்கு கொரோனா அறிகுறிகளே இல்லை” : அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழு!
உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,778 அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க அரசு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டினர் என நாடுமுழுவதும் லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்தி அரசு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று உறுதியான மாணவிக்கு அறிகுறியே ஏற்படாதது ஒட்டுமொத்த இந்திய மருத்துவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவி கடந்த மாதம் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு ரயில் மூலம் வந்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதன்பிறகு எர்ணாகுளம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தட்டார்.
அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் அவருக்கு எந்த வித கொரோனா அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளார். இது அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபருக்கு அறிகுறி இல்லாமல் இருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றார். அவரின் இத்தகைய பாதிப்புகளை மத்திய அரசின் சுகாதாரத்துறைக்கு தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கேரளாவில் உள்ள மருத்துவர்கள் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !