India
“வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை” : ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடி!
கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும், தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
ஆனாலும் அரசு இதுவரை போதுமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏழை, தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். மேலும் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நாட்டுமக்கள் செய்தியாளர்கள் என அனைத்துத் துறையினரும் சமூக விலகலைக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.
மேலும், வங்கிகளுக்கான ரெப்பொ வட்டி விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4% சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு :
வங்கிகளுக்கான ரெப்பொ வட்டி விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதம் ஆக குறைப்பு. ரிவர்ஸ் ரெப்போ 4.9சதவீதத்திலிருந்து 4%சதவீதமாக குறைப்பு.
வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்கடன், வாகனக்கடன் வட்டி குறைய வாய்ப்பு.
கொரோனா பாதிப்பு நீடித்தால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
கொரோனா பாதிப்பு நீடித்தால், கச்சா எண்ணெய் விலை குறையும்பட்சத்தில் காய்கறி விலை குறையும், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும்.
கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கண்காணிக்கப்படுகிறது.
பொருள் விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன.
தொழில்துறையினர் பெற்ற கடன்களுக்கான வட்டி குறையவும் வாய்ப்பு.
அனைத்துக் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மார்ச் முதல் தேதியிலிருந்து 3 மாதங்களுக்கு கடன் தவணைகளை (EMI) வசூலிப்பதை ஒத்திவைக்கவேண்டும். இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்படக் கூடாது” ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க சிறப்பு திட்டங்கள் அறிவித்தார். அவை, சந்தையில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வது.
வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு. சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!