India
#CoronaLockdown : ஏழைகள், கூலி தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
ஆனாலும் அரசு இதுவரை போதுமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது, ஏழை, தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு :
ஏழை, தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு!
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு 50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு.
80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன் அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
அடுத்த 3 மாதங்களுக்கு நபர் ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 8.69 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும் நிலையில், முதல் தவணை தற்போது உடனே வழங்கப்படும்.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் 5 கோடி பேருக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும்.
ஜந்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு சமையல் எரிவாயு இலவசம்.
மூத்த குடிமக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.
தொழிலாளர்கள், நிறுவனங்களுக்கான அடுத்த 3 மாதங்களுக்கான வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும்.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து 75% பணத்தை முன்பணமாக தொழிலாளர்கள் பெற்றுக்ள்ள அனுமதி வழங்கப்படும். ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
Also Read
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!