India

கொரோனா அவசர நிலை - வரி செலுத்த கால அவகாசம் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் நடமாட்டத்தை தவிர்த்து சமூகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் பொருளாதார ரீதியிலான சிக்கலை தடுப்பதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக காணொளி காட்சியின் மூலம் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பின் விவரம் பின்வருமாறு:-

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ஆதார் எண்-பான் எண் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* காலதாமத கட்டண செலுத்துதலுக்கான வட்டி விகிதம் 12ல் இருந்து 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* ஜிஎஸ்டி செலுத்தும் 5 கோடிக்கும் குறைவான வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் ஏதும் இல்லை.

* அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து ஏடிஎம்களிலும் சேவை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்

* ஜூன் மாதம் வரை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்பு நிதி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

* பிற வங்கி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்க எந்தவித சேவைக் கட்டணமும் இல்லை.

* பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Also Read: “துரிதமாக பரவுகிறது கொரோனா: 4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு பாதிப்பு” - WHO டெட்ராஸ் கவலை!