India
விமான நிலையங்களை அரசிடம் இருந்து பறித்து அதானிக்கு கொடுக்க நினைக்கும் மோடி- போர்க்கொடி உயர்த்தும் பினராயி
பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பது என பல உதவிகளை முனைப்புடன் செய்து வருகிறது மோடி அரசு.
மேலும் கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து பா.ஜ.க அறிவித்துள்ளது. இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் பா.ஜ.க செயல்படுகிறது என பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் கௌதம் அதானிக்கு மோடி அரசு நிலக்கரி, மின்சாரத் துறையில் ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பந்தங்களை வாரி வழங்கியுள்ளது. இது போதாதென்று விமான நிலையங்களைக் கையாள்வதில் முன் அனுபவமே இல்லாத அதானி குழுமத்துக்கு 6 விமான நிலையங்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தத்தையும் வழங்கியது.
அந்த 6 விமான நிலையங்களில் திருவனந்தபுரம் விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தை அதானிக்கு அளிப்பதற்கு கேரள அரசு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியது. விமான நிலையங்களை தனியாருக்கு கொடுக்க எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், கொச்சி மற்றும் கன்னூர் விமான நிலையங்களை மாநில அரசின் அமைப்பே நிர்வகிப்பதால், அந்த பொறுப்பை மாநில அரசுக்கு தரவேண்டும் என நீதிமன்றத்தில் கோரியது.
ஆனால் நீதிமன்றம் வழக்கில் முகாந்திரம் இல்லை என வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனிடையே அதானிக்கு அளிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லாமல் போனது.
ஆனால், விமான நிலையத்தை விட்டுக்கொடுக்க முன்வராத கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கைப் பதிவு செய்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ வழக்கை மீண்டும் கேரள உயர்நீதிமன்றம் விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இந்த பிரச்னைகள் நீளும்போதே இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா கேரளாவில் தீவிரமானது.
வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் நிதியைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கொரோனா பிரச்னைகளுக்கு மத்தியில் விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் போடும் பணியில் மோடி அரசு தீவிரம் காட்டிவருவதாக அம்மாநில இடதுசாரி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!