India
“17 வெளிநாட்டினர் உட்பட 85 பேருக்கு கொரோனா பாதிப்பு” : மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட்-19 எனும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி மக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டும் வருகின்றன.
ஆனாலும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கேரளாவில் மேலும் 3 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு இருப்பது இரண்டு நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் அந்த மாநிலத்தில் கோவிட்-19 காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருந்தது. இதனையடுத்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்ததால், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 பேர் வெளிநாட்டினர். 68 பேர் இந்தியர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?