India
டெல்லி வன்முறை : சூறையாடப்பட்ட 14 மசூதி, தர்ஹாக்கள்.. இந்துத்வ கும்பலின் திட்டமிட்ட வெறிச்செயல் அம்பலம்!
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி போராட்டம் தொடங்கியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது, பிப்ரவரி 24ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது.
இந்த வன்முறை சுமார் 32 மணிநேரத்துக்கு நீடித்தது. இதனால் இதுவரை 53 பேர் பலியாகியும், நூற்றுக்கும் மேலானோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். மேலும், இந்துத்வ கும்பலால் வடகிழக்கு டெல்லியின் முக்கால்வாசி பகுதி சூறையாடப்பட்டதால் இதுகாறும் நகரம் முழுவதும் மயானம் போன்றே காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் இருப்பிடம், மசூதிகள், தர்ஹாக்கள் உள்ளிட்டவை குறிவைத்து இந்துத்வ வெறியர்களால் சூறையாடப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் அனைத்தையும் பட்டப்பகலிலேயே அரங்கேற்றியுள்ளனர்.
ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி, இஸ்லாமியர்களின் இருப்பிடங்களை தேடித்தேடி அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, வீடுகளில் உள்ள பொருட்களை சூறையாடியிருக்கின்றனர்.
இதுவரை வடகிழக்கு டெல்லியில் கோகுல்புரி, அசோக்நகர், சந்த்பாக், ஷிவ் விஹார், கரிமெண்டு, காம்ரி, பாகிரதி விஹார் முகுந்த் நகர், பிரிஜ்புரி ஆகிய பகுதிகளில் உள்ள 14க்கும் மேற்பட்ட மசூதிக்கள், தர்ஹாக்கள் ஒட்டுமொத்தமாக இந்துத்வ வெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஆனால், ஆட்சியாளர்களோ இருதரப்பு மக்களும் கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துவருகின்றனர். உண்மையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் ஒரு இந்துக் கோவில்கள் கூட சேதமடையவில்லை.
இது முழுக்க முழுக்க பா.ஜ.கவினரின் தூண்டுதலால் இந்துத்வ வெறியர்களின் மதவாதச் செயல் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள இந்து மக்களே இதனை மதசகிப்புத் தன்மைக்கான அறிகுறி எனச் சாடியுள்ளனர். மசூதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!