India
“பொருளாதாரத்தை சீரமைக்காமல் மதவெறியைத் தூண்டுகிறார் பிரதமர் மோடி” - பா.ஜ.க அரசை விளாசிய ஜப்பான் நாளேடு!
தேர்தல்களில் வெற்றி பெறும் பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதாரத்தை செயலிழக்கச் செய்துவிட்டார் என ஜப்பானின் Nikkei Asian Review என்ற பொருளாதாரப் பத்திரிகை முகப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று (மார்ச் 11) வெளியான அப்பத்திரிகையின் முகப்புக் கட்டுரையில், 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், குஜராத் மாநிலத்தில் ஏற்படுத்திய பொருளாதார முன்னேற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால், முதல் 5 ஆண்டுகால ஆட்சியின்போதே, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி நிலைகுலையச் செய்துவிட்டார் என Nikkei Asian Review விமர்சித்துள்ளது.
இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டபோதும், 2019-ம் ஆண்டு நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனக் குறிப்பிட்டதோடு, பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக ஆயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்ட குஜராத் மதக்கலவரத்தை மீண்டும் செயல்படுத்த மோடி தொடங்கி விட்டதாகவும் அந்தக் கட்டுரையில் சாடப்பட்டுள்ளது.
இதற்காக, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, இஸ்லாமியர்களை பாகுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக இந்தியாவின் அனைத்து நகரங்களும் போராட்டக்களங்களாக மாறி உள்ளதையும் Nikkei Asian Review சுட்டிக்காட்டி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால், இந்தியாவின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி செயலிழக்கச் செய்துவிட்டார் எனவும் அந்தப் பொருளாதாரப் பத்திரிகை குற்றஞ்சாட்டியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!