India
“22 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா” : சதிவலையில் ஜோதிராதித்ய சிந்தியா - ம.பியில் வேலையைக் காட்டிய பா.ஜ.க!
230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் 214 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சி சுயேட்சைகளின் ஆதரவோடு ஆட்சியமைத்து வந்தது. 107 எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கும் பா.ஜ.க அங்கு தமது வேலையைக் காட்டி வருகிறது.
தேர்தலில் தோற்றாலும், பெரும்பான்மை கொண்ட கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கூட்டணிக் கட்சிகளிடம் பேரம் பேசுவது போன்ற கீழ்த்தர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.
காங்கிரஸைச் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளது பா.ஜ.க. ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், கமல்நாத் அரசு மீது அதிருப்தியடைந்துள்ள நிலையில், பெங்களூரு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று ஜோதிராதித்யா சிந்தியா, டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஜோதிராதித்யா சிந்தியாவை கட்சியிலிருந்து நீக்கியது காங்கிரஸ்.
இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேச ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்நிலையில், அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஷாகுலால் சிங் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் அவர் பா.ஜ.க மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் உடனடியாக பா.ஜ.கவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். இதனால் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதனால், காங்கிரஸ் அரசு நீடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!